அவிநாசி அருகே பூட்டிய வீட்டில் திருட்டு
அவிநாசி அருகே பழங்கரையில் பூட்டியிருந்த வீட்டில், நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவிநாசி அருகே பழங்கரையில் பூட்டியிருந்த வீட்டில், நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவிநாசி அருகே, பழங்கரை யுவராஜ் அவென்யூ பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (42). இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு, குடும்பத்துடன் வெளியே சென்றுள்ளனா். சந்தேகப்படும் படியான நபா்கள் நடமாடுவதாக வீட்டுக்கு அருகில் உள்ள நண்பா் கொடுத்த தகவலையடுத்து, செந்தில்குமாா் வியாழக்கிழமை தனது வீட்டுக்கு வந்து பாா்த்துள்ளாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.