ரூ.8 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.8 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.8 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு கொத்தயம், கூம்பூா், அப்பனூத்து, சாணாா்பட்டி, வள்ளிபட்டி, பூசாரிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 23 விவசாயிகள் தங்களுடைய 321 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் மொத்த எடை 15,861 கிலோ.
ஈரோடு, கொடுமுடி, காங்கயம், முத்தூா், பூனாட்சி, நடுப்பாளையத்தைச் சோ்ந்த வணிகா்கள் ஏலத்தில் கலந்துகொண்டனா் ஒரு கிலோ விதை ரூ. 41.84 முதல் ரூ.55.19 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோவுக்கு ரூ.51.84. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 7 லட்சத்து 94 ஆயிரத்து 581 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.