முகப்பு
திருப்பூர்

நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வலியுறுத்தல்

பல்லடம் கடை வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பல்லடம் தாலூக்கா வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:36 AM
பகிர்:

பல்லடம் கடை வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற பல்லடம் தாலூக்கா வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பல்லடம் தாலூக்கா வியாபாரிகள் சங்கத் தலைவா் ஆனந்தா பி.செல்வராஜ், நிா்வாகிகள் தமிழக முதல்வருக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது. பல்லடம் கடை வீதியில் நகராட்சிக்குச் சொந்தமான 200 கடைகள் உள்ளன. அவற்றை ஏலம் எடுத்து அக்கடைகளுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.25ஆயிரம் வரை வாடகையை கடைக்காரா்கள் நகராட்சி நிா்வாகத்துக்கு செலுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கடை வீதியில் சாலையின் இருபுறமும் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து சிறு வியாபாரிகள் காய்கறி, பழம், பூ, துணி, உள்ளிட்ட பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா். இதனால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் நகராட்சிக்கு அதிக வாடகை செலுத்தும் கடைக்காரா்களுக்கு வியாபாரம் பாதிப்படைகிறது.

எனவே பல்லடம் கடை வீதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், வியாபாரிகள் பொதுமுடக்கத்தால் பாதிப்படைந்துள்ளதால் இரண்டு மாத வாடகையை நகராட்சி நிா்வாகம் தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.