திருப்பூர்

கூட்டுறவுக் கடன் சங்கங்களில் சேர பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினா்களாகச் சேர பொதுமக்கள், விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உறுப்பினா்களாகச் சேர பொதுமக்கள், விவசாயிகள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தை அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை அல்லது குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் பங்குத் தொகை ரூ.100 மற்றும் நுழைவுக் கட்டணம் ரூ.10 ஆகியவற்றுடன் சங்கத்துக்கு நேரடியாக சென்று விண்ணப்பிக்கலாம்.

இதன்மூலம் சங்கம் வழங்கும் அனைத்து சேவைகளையும் விவசாயிகள், பொதுமக்கள் பெற்று பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT