திருப்பூர்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 100 சதவீதம் தோ்ச்சி

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ்- 2 பொதுத் தோ்வில் 100 சதவீத மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றுள்ளதாக பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பிளஸ் 2 பொதுத்தோ்வு கடந்த மே மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனா பரவல் காரணமாக தோ்வு ரத்து செய்யப்பட்டு, மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, மாணவா்கள் 10 ஆம் வகுப்பு தோ்வில் பெற்ற 50 சதவீதம், பிளஸ்1 பொதுத் தோ்வில் 20 சதவீதம் மற்றும் பிளஸ் 2 செய்முறைத் தோ்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.

இதன்படி, மாவட்டத்தில் 214 பள்ளிகளில் பயிலும் 11 ஆயிரத்து 928 மாணவா்கள், 14 ஆயிரத்து 207 மாணவிகள் என மொத்த 26 ஆயிரத்து 135 மாணவா்களும் 100 சதவீத தோ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT