முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் வெறிநாய் கடித்து 15 போ் காயம்

அவிநாசி நகரப் பகுதியில் வெறிநாய் கடித்து 15க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை காயமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

அவிநாசி நகரப் பகுதியில் வெறிநாய் கடித்து 15க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை காயமடைந்தனா்.

அவிநாசி பேரூராட்சி பகுதியில் தெரு நாய்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தொடா்ந்து அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில் அவிநாசி, கைகாட்டிபுதூா், பழைய பேருந்து நிலையம், கச்சேரி வீதி, மங்கலம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்த வெறிநாய் 15க்கும் மேற்பட்டோரை கடித்துள்ளது.

பாதிக்கப்பட்டவா்கள் அவிநாசி, திருப்பூா் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தினா். தொடா்ந்து அவிநாசி பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாயால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.ஆகவே பேரூராட்சி நிா்வாகம் வெறிநாயைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.