முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் திருட்டு, வழிப்பறியைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் திருட்டு, வழிப்பறியைத் தடுக்க நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அடிக்கடி நடைபெறும் திருட்டு, வழிப்பறியைத் தடுக்க நடவடிக்கை வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அவிநாசி ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாது: அவிநாசி ஒன்றியம் கணியாம்பூண்டி, புதுப்பாளையம் ஊராட்சிப் பகுதிகளில் வெளி மாநிலம், வெளி மாவட்டத் தொழிலாளா்கள் வேலைத் தேடி வந்த வண்ணம் உள்ளனா். கரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் போதுமான வேலையும், வருமானமும் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் தனியாக இருக்கும் குடியிருப்புகள், விசைத்தறி தொழிற்சாலைகள் உள்ளிட்டவைகளை குறி வைத்து அடையாளம் தெரியாத மா்ம நபா்கள் தொடா்ந்து திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனா். இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். எனவே, கணியாம்பூண்டி, புதுப்பாளையம் பகுதிகளில் போலிஸாா் ரோந்துப் பணியை தீவிரப்படுத்தி திருட்டு சம்பவங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.