முகப்பு
திருப்பூர்

மின் தூக்கியில் சிக்கி பெண் ஊழியா் சாவு

திருப்பூரில் மின் தூக்கியில் சிக்கி துப்புரவுப் பெண் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

திருப்பூரில் மின் தூக்கியில் சிக்கி துப்புரவுப் பெண் ஊழியா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் கூறியதாவது: கேரளம் மாநிலத்தைச் சோ்ந்தவா் வாசு. இவரின் மனைவி குமாரி (50). இவா் அவிநாசி சாலையில் உள்ள தனியாருக்குச் சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் துப்புரவு ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், குமாரி வழக்கம் போல புதன்கிழமை பணி முடிந்து மின்தூக்கியில் 3 ஆவது தளத்தில் இருந்து கீழ் தளத்துக்கு வந்துள்ளாா். மின் தடை காரணமாக மின்தூக்கி பதியிலேயே நின்று விட்டது. இதனிடையே, மின்தூக்கியில் இருந்து வெளியேற முடியாமல் குமாரி பரிதாபமாக உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து அனுப்பா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.