முகப்பு
திருப்பூர்

ரூ.1.75 கோடிக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.1.75 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:47 AM
பகிர்:

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.1.75 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூா், திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 553 விவசாயிகள் தங்களுடைய 6,764 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். மொத்த வரத்து 2,188 குவிண்டால்.

திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 31 வணிகா்கள் வாங்க வந்திருந்தனா். பருத்தி குவிண்டால் ரூ. 6,550 முதல் ரூ. 8,181 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.7,300. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 1 கோடியே 75 லட்சத்து 74 ஆயிரத்து 120.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.