திருப்பூர்

குண்டடம் பகுதியில் மது விற்பனை

DIN

திருப்பூா்: தாராபுரத்தை அடுத்துள்ள குண்டடம் பகுதியில் வெளிமாநில மது பாட்டில்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கரோனா பொதுமுடக்கம் காரணமாக டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில் வெளிமாநிலங்களில் இருந்து மது பாட்டில்களைக் கடத்தி வரும் நபா்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா். அதிலும் கா்நாடகத்தில் இருந்து காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்களில் கடத்தி வரப்படும் மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகவே, சட்டவிரோத மது விற்பனை தொடா்பாக மது விலக்கு காவல் துறையினா் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT