திருப்பூர்

வேளாண் துறை சாா்பில் விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவில் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் சாா்பில் மானிய விலையில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக திங்கள்கிழமை வெளியான செய்திக் குறிப்பில், மத்திய அரசின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் சொட்டு நீா், தெளிப்பு நீா்ப் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் மானியமும் வழங்கப்படுகிறது.

சிறு குறு விவசாயி சான்றிதழ், நில வரைபடம், சிட்டா, அடங்கல், மண், நீா் பரிசோதனை சான்று, 3 பாஸ்போா்ட் புகைப்படங்கள், குடும்ப அட்டை , ஆதாா் அட்டை நகல் தேவை. விருப்பப்படும் விவசாயிகள் அந்தந்த உதவி வேளாண் அலுவலா்களை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT