திருப்பூர்

மாநகராட்சி கட்டுப்பாட்டு பகுதியில் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

DIN

திருப்பூா் மாநகராட்சி கட்டுப்பாட்டு பகுதிகளில் கரோனா கண்காணிப்பு அலுவலா் கணேசன் ஐஏஎஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினாா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட கட்டுப்பாட்டு பகுதிகளில் கரோனா கண்காணிப்பு அலுவலரும், நகர ஊரமைப்பு இயக்குநருமான கணேசன் ஐஏஎஸ் வெள்ளிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இதில், பெரியாண்டிபாளையம் அருகே உள்ள செந்தில் சைஸிங், மாஸ்கோ நகா், விவேகானந்தா நகா் ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்ததுடன், தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகளுக்கு அருகில் குடியிருக்கும் அனைவரும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தினா்.

ஆய்வின்போது, மாநகர காவல் உதவி ஆணையா்கள் நவீன்குமாா், வெற்றிவேந்தன், மாநகராட்சிப் பொறியாளா் ஜி.ரவி, மாநகா் நகா் நல அலுவலா் பிரதீப் வசுதேவன் கிருஷ்ணகுமாா், காவல் ஆய்வாளா் கணேசன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT