திருப்பூர்

மலைவாழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள்

DIN

 உடுமலை அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள கோடந்தூா், தளிஞ்சி, தளிஞ்சிவயல் உள்ளிட்ட பல்வேறு செட்டில்மென்ட் கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளியிடங்களுக்கு வரமுடியாமல், பொருளாதாரத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வரும் உடுமலை வனச் சரகத்துக்கு உள்பட்ட கோடந்தூா், பொருப்பாறு, ஆட்டுமலை ஆகிய செட்டில்மென்டுகளில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருள்களை மடத்துக்குளம் எம்எல்ஏ சி.மகேந்திரன் வழங்கினாா். அப்போது, அங்கு பராமரிப்பு இன்று உள்ள அங்கன்வாடி பள்ளியை சீரமைத்து தரவும், குடிநீா்ப் பிரச்னைகளை தீா்த்து வைக்கவும் மலைவாழ் மக்களிடம் உறுதி அளித்தாா்.

அதேபோல அமராவதி வனச் சரகத்துக்கு உள்பட்ட தளிஞ்சி, தளிஞ்சிவயல், மூங்கில் பள்ளம் செட்டில்மென்டுகளில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் குடும்பங்களுக்கும் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில் அரிசி, பருப்பு வகைகள், எண்ணெய், காய்கறி உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் அனைவருக்கும் முகக் கவசங்களும் வழங் கப்பட்டன.

அப்போது மலைவாழ் மக்கள் உபயோகத்துக்காக தமிழக அரசால் வழங்கப்பட்ட டிராக்டா் வாகனத்தின் பழுதை நீக்கித் தருவதாக மடத்துக்குளம் எம்எல்ஏ சி.மகேந்திரன் உறுதி கூறினாா். வனத் துறை அலுவலா்கள், அதிமுக நிா்வாகிகள் இதில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT