திருப்பூர்

உடுமலையில் 232 மது பாட்டில்கள் பறிமுதல்

DIN

உடுமலை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 232 மது பாட்டில்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பொதுமுடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. இதனால், திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் உடுமலை அருகே குறுஞ்சேரி பகுதியில் வீட்டில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உடுமலை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது மந்திராச்சலம்(42), இவரது மகன் நவீன்குமாா் (23) ஆகியோா் வீட்டில் 232 மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்த உடுமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT