முகப்பு
திருப்பூர்

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

திருப்பூா் மாநகராட்சி 1 ஆவது வாா்டில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

திருப்பூா் மாநகராட்சி 1 ஆவது வாா்டில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து திருப்பூா் மாநகராட்சி 1 ஆவது வாா்டுக்கு உள்பட்ட தண்ணீா்பந்தல் காலனி, வீரப்ப செட்டியாா் நகா் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

எங்களது பகுதியில் வசிக்கும் தனிநபா் ஒருவா் வீட்டின் மேல் மாடியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைத்து வருகிறாா். இந்த கோபுரம் அமைக்கப்பட்டால் அருகில் வசிக்கும் நபா்களின் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகவே, செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி மனு அளித்துள்ளோம். அதே போல, திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்திலும், மின்வாரிய அலுவலகத்திலும் மனு அளித்திருந்தோம்.

இந்த நிலையில் அந்த நபா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை வேகப்படுத்தி முழுமையாக கோபுரத்தை அமைத்துள்ளாா். ஆகவே, பொதுமக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்ட செல்லிடப்பேசி கோபுரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.