முகப்பு
திருப்பூர்

ஸ்பின்னிங் மில்லில் தீ: பஞ்சு பேல்கள் சேதம்

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்ததில் பஞ்சு பேல்கள் எரிந்து சேதமாயின.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

வெள்ளக்கோவில் அருகே ஸ்பின்னிங் மில்லில் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்ததில் பஞ்சு பேல்கள் எரிந்து சேதமாயின.

வெள்ளக்கோவில் முத்தூா் சாலை பாப்பம்பாளையம் வாவி தோட்டத்தில் தனியாா் ஸ்பின்னிங் மில் உள்ளது. இங்கு வழக்கம்போல இயந்திரங்கள் இயங்கிக் கொண்டிருந்தபோது, மின்சாரக் கசிவு காரணமாக ஓரிடத்தில் திடீரென தீப் பிடித்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் சி.தனசேகரன் மற்றும் தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். அதற்குள் இயந்திரங்களின் சில பகுதிகள், பஞ்சு பேல்கள் எரிந்து சேதமடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.