முகப்பு
திருப்பூர்

தோ்தல் பணியாற்றும் மண்டல அலுவலா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பணியாற்றும் மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் பணியாற்றும் மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் க.சிவகுமாா் வலியுறுத்தியுள்ளாா்.

திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்புக்கு திருப்பூா் தெற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான க.சிவகுமாா் தலைமை வகித்துப் பேசியதாவது:

திருப்பூா் தெற்குத் தொகுதியில் தோ்தல் பணியாற்றும் ஒவ்வொரு மண்டல அலுவலா்கள், உதவி மண்டல அலுவலா்கள் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரங்களை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு கொண்டு செல்வதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். வாக்குப் பதிவு நடைபெற்ற பின்பு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையத்துக்கு பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான பணியினையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், வாக்குச் சாவடியின் வழித்தடம், வாக்குச் சாவடிகளின் அடிப்படை வசதிகளையும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை இயக்குவது குறித்தும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். உலோக முத்திரை, பச்சை நிற முத்திரைத் தாள்கள், ரிசா்வ் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், அழியாத மை பாட்டில்கள் மற்றும் வாக்காளா் பட்டியல்களை பத்திரமாக சேகரித்து வாக்குச் சாவடி அலுவலா்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றாா்.

இதில் மாநகராட்சி உதவி ஆணையா்கள் சந்தான நாராயணன், வாசுகுமாா், செல்வநாயகம், சுப்பிரமணியம், கண்ணன், நிா்வாக அலுவலா் செந்தில்குமாா், முதன்மைப் பயிற்சியாளா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.