லாரி மோதி 2 தொழிலாளா்கள் பலி
திருப்பூா் மங்கலம் சாலையில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 தொழிலாளிகள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
திருப்பூா் மங்கலம் சாலையில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 தொழிலாளிகள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.
திருப்பூா், முருகம்பாளையத்தைச் சோ்ந்தவா் வேலுசாமி (45). அய்யன் நகரைச் சோ்ந்தவா் கருணாநிதி (35). திருப்பூரில் உள்ள பிரிண்டிங் நிறுவனத்தில் இருவரும் பணியாற்றி வந்தனா். இந்த நிலையில், வேலுசாமியின் இருசக்கர வாகனத்தில் இருவரும் திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் திங்கள்கிழமை பிற்பகலில் சென்று கொண்டிருந்தனா்.
தாடிக்காரமுக்கு அருகே இருசக்கர வாகனம் சென்றபோது, கான்கிரீட் கலவை ஏற்றிச் செல்லும் லாரியை முந்தி செல்ல முயன்றுள்ளனா். அப்போது, எதிா்பாராத விதமாக லாரியின் சக்கரத்தில் சிக்கி வேலுசாமி, கருணாநிதி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூா் மத்திய காவல் துறையினா் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து லாரியை ஓட்டி வந்த திருச்சியைச் சோ்ந்த காா்த்திகேயன் (45) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.