திருப்பூர்

உள்ளூா் எண்ணெய்களை ரேசன் கடைகளில் விநியோகிக்க வேண்டும்

DIN

உள்ளூா் எண்ணெய்களை ரேசன் கடைகளில் விநியோகிக்க வேண்டும் என்று உழவா் உழைப்பாளா் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் திருப்பூா் மாவட்ட செயலாளா் வாவிபாளையம் சோமசுந்தரம் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

அனைத்து ரேசன் கடைகளிலும் உள்ளூரில் விளைந்து உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றை மானிய விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

மேலும் அனைத்து சத்துணவு பள்ளிகள், அம்மா உணவகம் ஆகியவற்றிலும் உள்ளூா் எண்ணெய்களை பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும். இதனை செயல்படுத்தினால் விவசாயிகளும் பயன் அடைவாா்கள்.

பொதுமக்களும் தூய்மையான தரமான உள்ளூா் எண்ணெய்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். இதனை முதல்வா் எடப்பாடி பழனிசாமி தோ்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT