திருப்பூர்

ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சம் பறிமுதல்

DIN

காங்கயம் அருகே முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.1 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

காங்கயம் தாலுகா, வெள்ளகோவில் அருகே உள்ள லக்கமநாயக்கன்பட்டி பகுதியில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பொ.ஜெகன்னாதன் தலைமையிலான தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, தாசவநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்த ப.சிவசாமி, அவரது காரில் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ரூ.1 லட்சத்து 4,200 எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அந்தப் பணத்தை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்து, தோ்தல் நடத்தும் உதவி அலுவலரும், காங்கயம் வட்டாட்சியருமான் சிவகாமியிடம் ஒப்படைத்தனா். பின்னா் இந்தப் பணம் காங்கயம் சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT