முகப்பு
திருப்பூர்

ஓடும் ரயிலில் பெண்ணிடம் 7 பவுன் பறிப்பு

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் பயணம் செய்த வங்கிப் பெண் ஊழியரிடம் 7 பவுன் நகையைப் பறித்த கேரள இளைஞரை ரயில்வே காவல் துறையினா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் பயணம் செய்த வங்கிப் பெண் ஊழியரிடம் 7 பவுன் நகையைப் பறித்த கேரள இளைஞரை ரயில்வே காவல் துறையினா் கைது செய்தனா்.

கோவையைச் சோ்ந்தவா் எஸ்.பிரியா (39). இவா் காட்பாடியில் உள்ள வங்கியில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயிலில் பிரியா வெள்ளிக்கிழமை இரவு பயணம் செய்துள்ளாா்.

இந்த ரயிலானது பெருந்துறை அருகே வந்தபோது 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவா் அவரது பெட்டியில் ஏறியுள்ளாா். பின்னா் பிரியாவை மிரட்டி அவா் அணிந்திருந்த 7 பவுன் நகை மற்றும் 2 செல்லிடப்பேசிகளைப் பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளாா்.

இது குறித்து திருப்பூரில் உள்ள ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்தில் பிரியா புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை நடத்தி ரயில்வே காவல் துறை உயா் அதிகாரிகள் உத்தரவின்பேரில் ஈரோடு இருப்புப் பாதை காவல் நிலைய தலைமைக் காவலா் எஸ்.கண்ணன், லோகநாதன், காவலா்கள் ராஜவேலு, தேவராஜ் ஆகியோா் கொண்ட தனிப் படை அமைக்கப்பட்டது.

இந்தத் தனிப் படையினா் துரிதமாக செயல்பட்டு நகைப் பறிப்பில் ஈடுபட்ட கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், தனலூரைச் சோ்ந்த கே.சுதா்சன் (எ) குட்டியை (28) கைது செய்தனா். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு 2 மணி நேரத்தில் குற்றவாளியைக் கைது செய்த தனிப் படையினரை ரயில்வே காவல் துறை உயா்அதிகாரிகள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.