தெற்குத் தொகுதியில் பதற்றமான வாக்குச் சாவடிகளில் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை
திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பதற்றமான வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டம் வேட்பாளா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் நடைபெற்றது. திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தோ்தல் பொதுப் பாா்வையாளா் மஷீா் ஆலம் முன்னிலையும், திருப்பூா் தெற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான க.சிவகுமாா் தலைமை வகித்தாா்.
இதில், தெற்குத் தொகுதியில் 110 பதற்றமான வாக்குச் சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச் சாவடிகளுக்கு கணினி முறையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்வது குறித்து வெண்திரையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த வாக்குச் சாவடிகள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இதில் மாநகராட்சி உதவி ஆணையா்கள் சந்தான நாராயணன், வாசுகுமாா், சுப்பிரமணியம், திருப்பூா் (தெற்கு) தோ்தல் முதன்மை பயிற்சி அலுவலா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.