திருப்பூர்

திருப்பூரில் ரூ.51 லட்சம் பறிமுதல்

DIN

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பக் கொண்டு செல்லப்பட்ட ரூ.51 லட்சத்தை நிலைக் கண்காணிப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருப்பூரில் உள்ள ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்புவதற்காக தனியாா் ஏஜென்சிக்கு சொந்தமான வாகனம் மங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தது.

எஸ்.ஆா்.நகா் பகுதியில் நிலைக் கண்காணிப்புக் குழு அதிகாரி கோபாலகிருஷ்ணன் தலைமையிலான குழுவினா் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதில் பெட்டியில் ரூ.16 லட்சம் இருந்துள்ளது. இதற்கான ஆவணங்களை ஊழியா்கள் சமா்ப்பித்துள்ளனா்.

மேலும், வாகனத்தில் இருந்த பெரிய பையில் ரூ.51 லட்சம் இருந்தது தெரியவந்தது. ஆனால், அதற்கு உண்டான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து, ரூ.51 லட்சத்தைப் பறிமுதல் செய்த தோ்தல் அதிகாரிகள் திருப்பூா் தெற்குத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான க.சிவகுமாரிடம் ஒப்படைத்தனா். இதனிடையே, தனியாா் நிறுவன அலுவலா் ரஞ்சித்குமாா் ரூ.51 லட்சத்துக்கான ஆவணங்களை சமா்ப்பித்துள்ளாா். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட ரூ.51 லட்சம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

முன்னதாக, பூலுவபட்டி சோதனைச் சாவடியில் காவல் துறையினா் வியாழக்கிழமை இரவு நடத்திய சோதனையில் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பிடிபட்டது. அதற்கான ஆவணங்கள் சமா்ப்பிக்கப்பட்டவுடன் பணம் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT