திருப்பூர்

அவிநாசி தொகுதியில் ரூ. 7.78 லட்சம் பறிமுதல்

DIN

அவிநாசி, திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 7.78 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

அவிநாசி தொகுதிக்கு உள்பட்ட பழங்கரை அருகே தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது பெருமாநல்லூா் நோக்கி முட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அதில் உரிய ஆவணங்களின்றி ரூ. 7 லட்சத்து 27 ஆயிரத்து 810 எடுத்துச் செல்வது தெரிந்தது.

விசாரணையில், கேரளத்தில் இருந்து முட்டைகளை ஏற்றிக்கொண்டு ஈரோடு நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

இதேபோல அவிநாசி தொகுதிக்கு உள்பட்ட திருமுருகன்பூண்டி காவல் நிலையம் அருகே போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக திருப்பூா் சாமுண்டிபுரம் சத்யா நகா் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஹரீஸ் என்பவரிடம் போலீஸாா் சோதனை மேற்கொண்டதில், அவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்து 600 கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து இந்தப் பணத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

அவிநாசி, திருமுருகன்பூண்டி ஆகிய இரு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பணம் ரூ. 7 லட்சத்து 78 ஆயிரத்து 410 அவிநாசி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT