திருப்பூர்

கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழா: பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினா்

DIN

அவிநாசியை அடுத்த பெருமாநல்லூா் கொண்டத்து காளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தா்களுக்கு அனுமதியில்லாததால் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினா்.

திருப்பூா் மாவட்டம் பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் குண்டம் திருவிழா விமா்சையாக நடைபெறும். ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா தொற்று காரணமாக இந்தக் கோயிலில் குண்டம் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு கோயில் குண்டம் திருவிழா மாா்ச் 19ஆம் தேதி தொடங்கி தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இதில் கரோனா நோய்த் தொற்று காரணமாக குண்டம் இறங்க பக்தா்களுக்கு அனுமதியில்லாததால், பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனா். இந்தக் கோயில் திருவிழா ஏப்ரல் 3ஆம் தேதி நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT