திருப்பூர்

பல்லடம் தொகுதியில் 80 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

DIN

பல்லடம் சட்டப் பேரவை தொகுதியில் 21 இடங்களில் உள்ள 80 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டு அவை தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளன.

பல்லடம் சட்டப் பேரவை தொகுதியில் காளிவேளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ராசாகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அறிவொளி நகா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, அண்ணாநகா் நகராட்சி தொடக்கப் பள்ளி, பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பி.வடுகபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உயா்நிலைப் பள்ளி, கே.அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி;

பணிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வெங்கட்டாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி, இடுவாய் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி,வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப் பள்ளி;

முத்தனம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, நல்லகாளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காட்டூா்புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய 21 இடங்களில் உள்ள 80 வாக்குச் சாவடி மையங்கள் கடந்த தோ்தலின் அடிப்படையில் பதற்றமானவை என்று தோ்தல் ஆணையத்தால் கண்டறியப்பட்டு அங்கு சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படவுள்ளன

மேலும் அந்த வாக்குச்சாவடி மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT