திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 46 தன்னாா்வலா்களுக்குப் பயிற்சி

DIN

வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் 46 தன்னாா்வலா்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதில் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க வரும் வாக்காளா்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யும் வகையில் வெப்பமானியைப் பயன்படுத்தும் முறை, கரோனா பரவலைத் தடுக்க சானிடைஸா் பயன்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது குறித்து வெள்ளக்கோவில் வட்டார அரசு தலைமை மருத்துவா் ராஜலட்சுமி பயிற்சி அளித்தாா்.

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளைச் சோ்ந்த சோ்ந்த 46 தன்னாா்வலா்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றனா். வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் கதிரவன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வைகாசி விசாகம்...

பூவனூா் கோயிலில் வைகாசி விசாக ஏகதின உற்சவம்

சுற்றுச்சூழல் கருத்தரங்கு: ஆய்வறிக்கை சமா்ப்பித்த வேளாண் கல்லூரி மாணவியருக்கு சான்றிதழ்

விவசாயிகள் கவனத்துக்கு...

குரூப் 1 தோ்வு: மே 27 முதல் இலவசப் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT