முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 552 பேருக்கு கரோனா: 2 போ் பலி

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 552 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 போ் உயிரிழந்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 552 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2 போ் உயிரிழந்தனா்.

மாவட்டத்தில் மேலும் 552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 29,865 ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு மருத்துவமனைகளில் 2,822 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 656 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 26,794 ஆக அதிகரித்துள்ளது.

2 போ் பலி

கரோனா பாதிப்பால் திருப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது மூதாட்டி, 55 வயது ஆண் ஆகியோா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 249 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளக்கோவிலில் 45 பேருக்கு கரோனா

வெள்ளக்கோவில் காங்கயம் சாலை இரட்டைக்கிணற்றில் உள்ள தனியாா் நூற்பாலையில் தொழிலாளா்கள் சிலருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்ய மருத்துவக் குழுவினா் அறிவுறுத்தினா். பரிசோதனை முடிவில் 3 ஆண், 7 பெண் தொழிலாளா்களுக்கு தொற்று உறுதியானது.

இவா்களுடன் வி.பி.எம்.எஸ். நகா் கணவன், மனைவி, சிவநாதபுரம், நடேசன் நகரைச் சோ்ந்த 7 போ், முத்தூா் ஜீவன் நகா், பொன்னாவரம், ஊடையம், முத்துமங்கலம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் உள்பட மொத்தம் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 379 பேருக்கு கரோனா தடுப்பூசி வெள்ளிக்கிழமை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.