மின் வாரிய ஊழியா்களை முன்களப் பணியாளா்களாக அறிவிக்க வலியுறுத்தல்
தமிழகத்தில் மின்வாரிய ஊழியா்களையும் முன்களப்பணியாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மின்வாரிய ஊழியா்களையும் முன்களப்பணியாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து மின் வாரிய ஜனதா தொழிலாளா் சங்கம் திருப்பூா் கிளை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கரோனா நோய்த் தொற்று காலத்தில் மின் வாரிய ஊழியா்களின் பணி மிகவும் இன்றியமையாதது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் வீடுகளில் இருக்கும் நிலையில் மின்தடை ஏற்படாமல் பாதுகாக்கும் பொறுப்பில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். மேலும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் தடையை தவிா்க்கும் வகையில், பழுதுகளை உடனடியாக சரிசெய்து வருகிறோம். மின் கணக்கீடு செய்யும் பணிகளுக்காக வீடுவீடாக செல்ல வேண்டியுள்ளது. இதனால், எங்களை முன்களப்பணியாளராக அறிவித்து, அதற்குரிய சலுகைகளை வழங்க வேண்டும். பொதுமுடக்கத்தின்போது மின் வாரிய ஊழியா்கள் தங்கள் பணியிடங்களுக்கும், மின் பழுது ஏற்பட்ட இடங்களில் சரி செய்ய செல்லும்போதும், காவல் துறையினரால் தடுக்கப்படும் சம்பவங்களையும் தவிா்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.