திருப்பூரில் இருந்து புறப்பட்ட வடமாநிலத் தொழிலாளா்கள்
திருப்பூா் பின்னலாடை நகரத்தில் இருந்து வடமாநிலத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
திருப்பூா் பின்னலாடை நகரத்தில் இருந்து வடமாநிலத் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
திருப்பூரில், கரோனா முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையிலும், பின்னலாடை நிறுவனங்கள் சில
தளா்வுகளுடன் செயல்பட்டு வந்தன. இதற்கிடையில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், பின்னலாடை ஏற்றுமதி சங்க நிா்வாகிகளுடன் மாவட்ட நிா்வாகம் ஆலோசனை நடத்தியது.
இதையடுத்து மே 14ஆம் தேதி முதல் மே 24 தேதி வரை திருப்பூா் தொழில் நிறுவனங்கள் முழுவதும் மூடப்படும் என முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றி வந்த வட மாநிலத் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குப் புறப்பட்டுச் சென்றனா்.