காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு
தாராபுரம் அருகே காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தாராபுரம் அருகே காவல் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் விழிப்புணா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திஷா மிட்டல் உத்தரவிட்டிருந்தாா்.
இதன்படி தாராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கண்ணன் தலைமையில் காவல் ஆய்வாளா் மகேந்திரன், உதவி ஆய்வாளா்கள் காா்த்திகேயன், ஜெயகுமாா் ஆகியோா் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக கொளத்துப்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட டி. காளிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் கரோனா விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், கரோனா வழிகாட்டு நெறிமுறைகள், ஆலோசனைகளையும் வழங்கினா்.
Image Caption
கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்திய காவல் துறையினா்.