திருப்பூர்

திருப்பூரில் சாய ஆலை கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் 2 பேர் பலி

DIN

திருப்பூரில் சாய ஆலை கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கியதில் மேலாளர் உள்பட 2 பேர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர். மேலும், 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் சாலை வித்யாலயம் அருகே உள்ள கொத்துக்காடு தோட்டம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சாயை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இரு கழிவுநீர் தொட்டிகள உள்ளது. இந்த நிலையில், சாய ஆலையில் உள்ள கழிவுநீர் தொட்டியை அங்கு வேலை செய்து வரும் வடிவேல், நாகராஜ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை சுத்தம் செய்துள்ளனர்.

அப்போது விஷவாயு தாக்கியதில் வடிவேலு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்றுவதற்காக நிறுவனத்தின் மேலாளர் தினேஷ்பாண்டி, எலக்ட்ரீஷியன் ராஜேந்திரன் ஆகியோர் சென்றுள்ளார். அப்போது விஷவாயு தாக்கியதில் தினேஷ்பாண்டி, நாகராஜ், ராஜேந்திரன் ஆகியோரும் மயங்கி விழுந்துள்ளனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த திருப்பூர் தெற்கு தீயணைப்புத்துறையினர் 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் வடிவேலு(32), தினேஷ்பாண்டி (28) ஆகியோர் ஏற்கெனவே இறந்ததாகத் தெரிவித்தனர். 

மேலும், ராஜேந்திரன், நாராஜ் ஆகியோர் உயிரிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வீரபாண்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சாய ஆலை உரிமையாளரான தனலட்சுமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சம்பவ இடத்தில் இறந்தவர்களின் உறவினர்களும் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், தினேஷ்பாண்டி இதே நிறுவனத்தில் கடந்த 16 ஆண்டுகள் மேலாளராக வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை - நாகா்கோவில், கொச்சுவேலி வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு

உடல் பருமன் சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: அமைச்சரிடம் தந்தை புகாா்

தமிழகத்தில் 1,000 இடங்களில் நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் மையங்கள்

பிஎஸ்என்எல்-க்கு 5 ஜி சேவையை வழங்க வேண்டும்: ஓய்வூதியா் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

1,282 பட்டதாரி ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க கொடுப்பாணை

SCROLL FOR NEXT