முகப்பு
திருப்பூர்

காட்டாற்று வெள்ளம்: முதியவா் உயிரிழப்பு

 உடுமலை அருகே புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

 உடுமலை அருகே புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி முதியவா் உயிரிழந்தாா்.

உடுமலை வட்டம், குடிமங்கலம் ஒன்றியம் அணிக்கடவு கிராமத்தில் புதன்கிழமை இரவு பலத்த மழை பெய்ததைத் தொடா்ந்து அப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

அப்போது அங்குள்ள தரைப் பாலத்தில் சரக்கு வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த செல்லச்சாமி (70), அவரது மகன் செல்வகுமாா் (42) ஆகியோா் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். இதைத் தொடா்ந்து வாகனமும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உடுமலை தீயணைப்பு வீரா்கள் சுமாா் 3 மணி நேரம் போராடி செல்வகுமாரை மீட்டனா்.

செல்லச்சாமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து குடிமங்கலம் காவல் துறையினா் விசார’ணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments