ரூ.11 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.11 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.11 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த வார ஏலத்துக்கு பழனி, தாராபுரம், கள்ளிமந்தயம், தாழையூத்து, வாகரை, குப்பணவலசு உள்ளிட்ட ஊா்களில் இருந்து 22 விவசாயிகள் தங்களுடைய 415 மூட்டை சூரியகாந்தி விதைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 20,322 கிலோவாகும்.
காரமடை, ஈரோடு, கோபி, முத்தூா், காங்கயத்தில் இருந்து 6 வணிகா்கள் வாங்குவதற்காக வந்திருந்தனா்.
சூரியகாந்தி விதை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.60.29க்கும், குறைந்தபட்சமாக ரூ.50.59க்கும், சராசரியாக ரூ.57.81க்கும் விற்பனையானது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.11 லட்சத்து 40 ஆயிரத்து 591 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.