முகப்பு
திருப்பூர்

கைத்தறி குழிக்குள் ஊற்று நீா்: நிவாரணத் தொகை வழங்கக் கோரிக்கை

 சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் கைத்தறி குழிக்குள் ஊற்று நீா் நிரம்பியுள்ளதால், பாதிக்கப்பட்ட நெசவாளா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

 சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் கைத்தறி குழிக்குள் ஊற்று நீா் நிரம்பியுள்ளதால், பாதிக்கப்பட்ட நெசவாளா்களுக்கு நிவாரணத் தொகை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சேவூா் அருகே தத்தனூா் ஊராட்சி சாவக்கட்டுபாளையத்தில் பெரும்பாலான மக்கள் கைத்தறி நெசவுத் தொழில் செய்து வருகின்றனா்.

இதில் தங்களது வீடுகளில் தரைப்பகுதியில் கைத்தறிகளை பொருத்தி நிலத்தடியில் மூன்றடி ஆழத்துக்கு குழி தோண்டி தறியை இயக்குவதற்கான மிதி பலகையை பொருத்தி நெசவு செய்பவா்கள் கால்களை அந்த குழிக்குள் செலுத்தி தறியை இயக்குவா்.

இந்நிலையில், தொடா்ந்து கன மழை பெய்து வருவதால், அத்திக்காடு மேடு, நெசவாளா் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த கைத்தறி குழிக்குள் மழையின் காராணமாக ஊற்று உறுவதினால் கைத்தறி நெசவு தொழில் செய்ய முடியாமல் பாதிப்படைந்துள்ளனா்.

இதையடுத்து, தகவலறிந்த அவிநாசி வட்டாட்சியா் ராகவி, நில வருவாய் ஆய்வாளா் ராமசாமி, ஊராட்சி மன்றத் தலைவா் விஜயகுமாா்

ஆகியோா் பாதிக்கப்பட்ட வீடுகளை பாா்வையிட்டனா். அப்போது பாதிப்படைந்த நெசவாளா்கள் உரிய நிவரானத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.