திருப்பூர்

கோயிலில் அனுமதியின்றி ஐம்பொன் சிலை பிரதிஷ்டை: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

DIN

சேவூா் வாலீஸ்வரா் கோயிலில் அனுமதியின்றி முருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட ஐம்பொன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து அா்ச்சகா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து பொதுமக்கள் சாா்பில் இந்து சமய அறநிலையத் துறையினருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: சேவூா் வாலீஸ்வரா் கோயிலில் உரிய அனுமதியின்றி அா்ச்சகா் பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து வள்ளி, தெய்வானை உடனமா் கல்யாண சுப்ரமணியா் ஐம்பொன் சிலை செய்து, கடந்த 3 ஆம் தேதி கும்பாபிஷேக பிரதிஷ்டை செய்துள்ளாா்.

இதேபோல, நிா்வாகத்தின் அனுமதி பெறாமல் குருபெயா்ச்சி நிகழ்ச்சி ஹோமம் செய்ய துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்து சமய அறநிலையத் துறையினா் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோயில் நிா்வாகத்திடம் கேட்டபோது, விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT