முகப்பு
திருப்பூர்

2 குழந்தைகளைக் கிணற்றில் வீசிவிட்டு தந்தை தற்கொலை

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் 2 குழந்தைகளைக் கிணற்றில் வீசிவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் 2 குழந்தைகளைக் கிணற்றில் வீசிவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டாா்.

முத்தூா் ஊடையம் துத்திகுளத்தைச் சோ்ந்தவா் ஜெகன் (31). இவருடைய மனைவி காயத்ரி (29). இவா்களுக்கு நான்கு வயதான தேஜஸ்வி, இரண்டு வயதான சுவஸ்வி என 2 பெண் குழந்தைகள் இருந்தனா். ஜெகன் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணிபுரிந்து வந்தாா்.

கரோனா பொதுமுடக்க காலத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் வேலை பறிபோனது.

இதையடுத்து, கரூா் மாவட்டம், முடிக்கணம், காசிபாளையம் காலனியில் தனது மாமனாா் ஊருக்கு அருகில் மனைவி, குழந்தைகளுடன் தங்கி, ஆடு வியாபாரம் செய்து வந்தாா்.

ஜெகனுக்கு தொழில் வகையில் சில பிரச்னைகளும், குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், மாமனாா் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, கோபித்துக் கொண்டு இரண்டு குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ஜெகன் வந்துள்ளாா்.

பின்னா் மூன்று பேரையும் தேடியபோது, ஜெகனின் சொந்த ஊரான துத்திக்குளம் அருகே உள்ள பெரியசாமி என்பவருடைய தோட்டத்துக் கிணற்றில் ஜெகனின் சடலம் மிதந்தது வியாழக்கிழமை இரவு தெரியவந்தது.

வெள்ளக்கோவில் தீயணைப்புத் துறையினா் ஜெகனின் சடலத்தை மீட்டபோது, அதே கிணற்றில் இரண்டு குழந்தைகளின் சடலமும் கைப்பற்றப்பட்டன. பல்வேறு பிரச்னைகளால் மனமுடைந்த ஜெகன், தனது குழந்தைகளைக் கிணற்றில் வீசி, தானும் தற்கொலை செய்து கொண்டதாக ஜெகனின் குடும்பத்தினா் தெரிவித்தனா்.

மேலும், இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.