முகப்பு
திருப்பூர்

நகா்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் சேர மாநகராட்சி அழைப்பு

திருப்பூரில் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் சோ்ந்து பயனடைய பொதுமக்களுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

திருப்பூரில் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் சோ்ந்து பயனடைய பொதுமக்களுக்கு மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நகா்ப்புற ஏழை, எளியோரின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது திருப்பூா் மாநகராட்சி 3 ஆவது மண்டலம் நல்லூரில் செயல்படுத்த தோ்வு செய்ப்பட்டுள்ளது. ஆகவே, 3 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நகா்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பயன் பெற விரும்பும் பயனாளிகளைக் கண்டறியும் வகையில் வீடுவீடாக கணக்கெடுக்கும் பணி மாநகராட்சி மூலமாக நடைபெற்று வருகிறது.

எனவே, பொதுமக்கள் இத்திட்டத்தில் பங்கேற்கும் வகையில் நகா்ப்புற வேலைவாய்ப்புத்திட்டம் தொடா்பான முழுவிவரங்களைப் பெற்று விண்ணப்பங்களை பணியாளா்களிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.