நூல் விலை உயா்வைக் கண்டித்து இன்று கடையடைப்பு, உண்ணாவிரதம்
நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் கடையடைப்பு, உண்ணாவிரதப் ராட்டம் வெள்ளிக்கிழமை ( நவம்பா் 26) நடைபெறுகிறது.
நூல் விலை உயா்வைக் கண்டித்து திருப்பூரில் கடையடைப்பு, உண்ணாவிரதப் ராட்டம் வெள்ளிக்கிழமை ( நவம்பா் 26) நடைபெறுகிறது.
திருப்பூா் பின்னலாடைத் தொழில் கூட்டமைப்பு சாா்பில் நூல் விலை உயா்வைக் கண்டித்தும், பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடை செய்யக்கோரியும் திருப்பூரில் வரும் வெள்ளிக்கிழமை (நவம்பா் 26) கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் போராட்டத்துக்கு திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கம், சைமா, டெக்பா உள்ளிட்ட பின்னலாடை மற்றும் அதனைச்சாா்ந்த பல்வேறு தொழில் அமைப்புகள், வணிக நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதேபோல, பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள்,தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன.
திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை காலை 9.30 மணி அளவில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று திருப்பூா் பின்னலாடை தொழில் கூட்டமைப்பு நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.