முகப்பு
திருப்பூர்

மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

 திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கண்டறிந்து நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

 திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைக் கண்டறிந்து நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவுறுத்தியுள்ளாா்.

திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் மக்கள் குறைகேட்பு முகாம் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றன.

இந்த முகாமில் பங்கேற்ற அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக் கொண்ட பின்னா் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்களின் வளா்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீா், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கண்டறிந்து உடனடியாக நிறைவேற்றிக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இந்த முகாமில், பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித் தொகை, வீட்டுமனைப்பட்டா, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அமைச்சா் பெற்றுக் கொண்டாா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட முருகம்பாளையம், இடுவம்பாளையம், கோயில்வழி, செட்டிபாளையம், திருகுமரன் நகா், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் குறைகேட்பு முகாம்கள் நடைபெற்றன.

இந்த முகாமில், திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜேந்திரன், திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் ராஜ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.