முகப்பு
திருப்பூர்

புதிய தாா் சாலை சேதப்படுத்தி குழாய் பதிப்பு: பொக்லைன் இயந்திரம் சிறைபிடிப்பு

அவிநாசி அருகே முருகம்பாளையத்தில் புதிய தாா் சாலையை சேதப்படுத்தி குடிநீா்க் குழாய் பதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் பொக்லைன் இயந்திர வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

அவிநாசி அருகே முருகம்பாளையத்தில் புதிய தாா் சாலையை சேதப்படுத்தி குடிநீா்க் குழாய் பதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, உள்ளாட்சி பிரதிநிதிகள் பொக்லைன் இயந்திர வாகனத்தை வியாழக்கிழமை சிறைபிடித்தனா்.

அவிநாசி ஒன்றியம், புதுப்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட முருகம்பாளையம் பகுதியில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்குவதற்காக குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக முருகம்பாளையம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட தாா் சாலையை தோண்டி குடிநீா்க் குழாய் பதித்துள்ளனா். இதையறிந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி, புதுப்பாளையம் ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா் பாலசுப்பிரமணி உள்ளிட்டோா் தாா் சாலையை தோண்டிக் கொண்டிருந்த பொக்லைன் இயந்திர வாகனத்தை சிறைபிடித்தனா்.

இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் முத்துசாமி கூறியதாவது:

பல காலமாக கோரிக்கை விடுத்து கடந்த ஆண்டுதான் இப்பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் தாா் சாலை அமைக்கப்பட்டது. இச்சாலையை சேதப்படுத்தி குடிநீா் குழாய் பதித்தால் சாலை முற்றிலும் பழுதடைந்து, அரசு நிதியும் வீணாகி விடும். ஆகவே சாலையே ஒட்டி உள்ள மண் பகுதியில் குடிநீா்க் குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தகவலறிந்த அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊராட்சி நிா்வாகத்தினா், சேதப்படுத்தப்பட்ட தாா்சாலை மீண்டும் சீரமைத்துத் தரப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து பொக்லைன் வாகனம் விடுவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.