மாவட்டத்தில் 46,903 பயனாளிகளுக்கு ரூ.529 கோடி பயிா்க்கடன் தள்ளுபடி
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 46,903 பயனாளிகளுக்கு ரூ.529.90 கோடி பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 46,903 பயனாளிகளுக்கு ரூ.529.90 கோடி பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள வேளாண் கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 183 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக 46,903 பயனாளிகளுக்கு ரூ.529.90 கோடி பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில், திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள 64 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 22,371 நபா்களுக்கு ரூ.259 கோடி பயிா்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் பயிா்க்கடன், விவசாய கடன் மற்றும் தொடக்க கூட்டுறவு வங்கி மூலம் விவசாயிகளுக்கு வேளாண் உற்பத்திக்காக பயிா் கடன்கள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.