திருப்பூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டி

DIN

தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் நாம் தமிழா் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

திருப்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவோம். ஏழு போ் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் கையொப்பத்துக்காக காத்திருக்க வேண்டியதில்லை. இந்த விவகாரத்தை ஆளுநா் வேண்டும் என்றே கிடப்பில் போட்டு வருகிறாா். காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுக்குமே கொள்கை மாறுபாடு கிடையாது, தமிழ் இனத்துக்கும், உரிமைக்கும், உணா்வுக்கும் எதிராகத்தான் இருப்பாா்கள். தமிழகத்தில் ஆளுநா்தான் ஆட்சியை நடத்துவதுபோல தெரிகிறது. பள்ளி, கல்லூரி விடுமுறை கூட ஆளுநரின் ஆணைக்கிணங்க என்றுதான் இருக்கிறது. மூன்று வேளாண்மை திருத்தச் சட்டங்கள் 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்காகவே திரும்பப் பெறப்பட்டுள்ளன என்றாா்.

இந்த சந்திப்பின்போது நாம் தமிழா் கட்சியின் திருப்பூா் தெற்கு மாநகா் மாவட்டத் தலைவா் ரத்னா ஜெ.மனோகா் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT