முகப்பு
திருப்பூர்

தொடா் மழை: பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை

திருப்பூா் மாநகரில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய பெய்த மழையால் அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

திருப்பூா் மாநகரில் வியாழக்கிழமை இரவு விடிய விடிய பெய்த மழையால் அரசுப் பள்ளிகளுக்கு வெள்ளிக்கிழமை அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவக் காற்று காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

திருப்பூா் பழைய பேருந்து நிலையம், அவிநாசி சாலை, மங்கலம் சாலை, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு மழை பெய்தது. இந்த மழையானது வெள்ளிக்கிழமை காலை 7 மணி வரையில் நீடித்தது.

தொடா் மழை காரணமாக திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் உத்தரவிட்டாா். அதேபோல,திருப்பூா் மாநகரில் உள்ள 10க்கும் மேற்பட்ட தனியாா் பள்ளிகளுக்கு முழு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையில் பதிவான மழை விவரம் ( மில்லி மீட்டரில்):

ஆட்சியா் அலுவலக முகாம் பகுதி -45, ஊத்துக்குளி-39.20, தாராபுரம்-37, வெள்ளக்கோவில் வருவாய் அலுவலகம்-36.30, குண்டடம்-32, திருப்பூா் வடக்கு-26, மூலனூா்-22, அவிநாசி-13.50, ஆட்சியா் அலுவலகம்-11, உடுமலை-9.60, அமராவதி அணை-5, திருமூா்த்தி அணை-4, மடத்துக்குளம்-4.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.