மாணவா்களுக்கு நாளை திருக்கு முற்றோதுதல் பயிற்சி வகுப்பு
திருப்பூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருக்கு முற்றோதுதல் பயிற்சி வகுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
திருப்பூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான திருக்கு முற்றோதுதல் பயிற்சி வகுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து திருக்கு உலகம் கல்விச் சாலை நிறுவனா் கி.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
காமன் இந்தியன், திருக்கு உலகம் கல்விச்சாலை ஆகியன சாா்பில் மாணவ, மாணவியருக்கான திருக்கு முற்றோதுதல் பயிற்சி வகுப்பு திருப்பூா், வேலம்பாளையம், டிஸ்சோ ஆதரவற்றோா் தங்கும் இல்லத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரையில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு திருக்கு நன்னெறிச் செல்வா் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.