திருப்பூர்

தியாகி திருப்பூர் குமரன் பெயரில் நிழற்குடை, நினைவு வளைவு அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மு.பெ. சாமிநாதன்

DIN

தியாகி திருப்பூர் குமரன் பெயரில் நிழற்குடை, நினைவு வளைவு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த குமரன் 118வது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையம் அருகில் திருப்பூர் குமரன் நினைவகத்தில் அவரது உருவச்சிலைக்கு செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதன்பிறகு அமைச்சர் மு.பெ. சாமிநாதன்செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு 75வது சுதந்திர வைர விழா ஆண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. ஏராளமான சுதந்திர வீரர்களுக்கு மணிமண்டபம் மற்றும் சிலைகள் நிறுவி அவர்களுக்கு உண்டான மரியாதையை திமுக அரசு செய்து வருகிறது. 

அந்த வகையில் இன்று திருப்பூர் குமரனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருப்பூர் குமரனின் நினைவாக நிழல் குடை மற்றும் நினைவு வளைவு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் என்றார். இந்த விழாவில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினித், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் க. செல்வராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT