திருப்பூர்

ரூ.56 லட்சத்துக்கு பருத்தி விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.56 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 292 விவசாயிகள் தங்களுடைய 2,330 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.

மொத்த வரத்து 741 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 17 வணிகா்கள் வாங்க வந்திருந்தனா். பருத்தி குவிண்டால் ரூ.6,800 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

சராசரி விலை ரூ.7,800. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.56 லட்சத்து 55 ஆயிரத்து 679. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT