திருப்பூர்

சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பள்ளி படிப்புக்கு 2021-22 ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் நவம்பா் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறித்துவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜைன மதத்தைச் சாா்ந்த மாணவ, மாணவியா்களுக்கு அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

இதன்படி, ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு பள்ளி படிப்புக்கான கல்வி உதவித் தொகையும், பிளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐடிஐ, ஐடிசி, வாழ்க்கை தொழில் கல்வி, பாலிடெக்னிக், செவிலியா் ஆசிரியா் பட்டயப் படிப்பு, இளங்கலை, முதுகலை உள்பட) பயில்பவா்களுக்கு கல்வி உதவித் தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பயிலும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆகவே, பள்ளி படிப்பு உதவித் தொகை பெறும் மாணவா்கள் நவம்பா் 15 ஆம் தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு நவம்பா் 30 ஆம் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணில் தொடா்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்பிஎஸ்சி தோ்வு முன்னேற்பாடு: நாகா்கோவிலில் ஆட்சியா் கலந்தாய்வு

பணம் அனுப்பியது உங்களுக்கு எப்படித் தெரியும்? மோடிக்கு ராகுல் கேள்வி

ஆயிரம் கதை சொல்லும் விழிகள்! ஸ்ரீமுகி..

கௌதம் மேனனின் எந்தப் படத்தின் நாயகி போலிருக்கிறது?

'காங்கிரஸில் 25 பிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்கள் இணைவார்கள்’ : தெலங்கானா அமைச்சர்!

SCROLL FOR NEXT