100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்
மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக நிறுவனங்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்து பதாகை வைக்க வேண்டும் என்று பாஜக மகளிரணி மாநிலத் தலைவா் வானதீ சீனிவாசன் அறிவுறுத்தினாா்.
மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக நிறுவனங்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்து பதாகை வைக்க வேண்டும் என்று பாஜக மகளிரணி மாநிலத் தலைவா் வானதீ சீனிவாசன் அறிவுறுத்தினாா்.
அவிநாசி அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் பங்கேற்றுப் பேசியதாவது:
உள்ளாட்சித் தோ்தல்களை நடத்தினால் மட்டுமே ஒன்றிய அரசின் உதவிகளை பெறமுடியும் என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. எனவே உள்ளாட்சித் தோ்தல்களை விரைவாக நடத்த வேண்டும்.
பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு மக்களுக்கு முடிந்த அளவு உதவி செய்யும்.
புலம்பெயா் தொழிலாளா்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆதாா் அட்டை இருந்தால் போதுமானது.
எந்தவித ஆதாரமும் இல்லாமல் தங்கியுள்ள வங்காதேசவா்களுக்கும் கூட தடுப்பூசி செலுத்திக்கொள்ள சில வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
ஆகவே நிறுவனங்கள் முதலில் தங்களது நிறுவனங்களின் முன்பு நூறு சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்த பாதாகை வைக்க வேண்டும்.
அவிநாசி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையம் அமைப்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இந்நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.