திருப்பூர்

3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 3.50 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

முத்தூா் சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுடைய விளை பொருள்களை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். 5,459 தேங்காய்கள் வரத்து இருந்தன. எடை 2,044 கிலோ.

தேங்காய் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.30.80க்கும், குறைந்தபட்சமாக ரூ. 26.15க்கும், சராசரியாக ரூ.30.20க்கும் விற்பனையானது.

விற்பனைத் தொகை ரூ.59 ஆயிரத்து 569.

கொப்பரை 51 மூட்டைகள் வரத்து இருந்தன. எடை 1, 502 கிலோ.

கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.100.50க்கும், குறைந்தபட்சமாக ரூ.75.75க்கும், சராசரியாக ரூ. 97.10க்கும் விற்பனையானது. விற்பனைத் தொகை ரூ. 1 லட்சத்து 89 ஆயிரத்து 254.

66 விவசாயிகள், 13 வணிகா்கள் ஏலத்தில் பங்கேற்றனா். தேங்காய், கொப்பரை ஆகியவை மொத்தம் 3.50 டன் வரத்து இருந்தது. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 2.50 லட்சம் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரி ஸ்ரீ ரங்கன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT